பதவி நீக்கத்தை நியாயப்படுத்தும் டிரம்ப் அணி!

Wednesday, February 1st, 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய பயண கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மறுத்துள்ள நிலையில், தற்காலிக அட்டர்னி ஜெனரலை பதவியில் இருந்து அகற்றியுள்ள முடிவை அதிபர் டிரம்பின் அணியினர் நியாயப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பதவி நீக்கம் என்பது, அதிபராக இருப்போரின் உத்தரவுகளை எதிர்ப்பது அவர்களது பணியல்ல என்பதை, அதிகாரிகள் அனைவருக்கும் சொல்லப்படும் செய்தியாகும் என்று செய்தி தொடர்பாளரில் ஒருவரான ஜென் ஹால்பர் ஹேயஸ் கூறியிருக்கிறார்.

பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு தற்காலிக பயணத்தடையை டிரம்ப் விதித்திருப்பது, அரசியல் சாசனப்படி முறையானதா என்று, பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ள தற்காலிக அட்டர்னி ஜெனரல் சால்லி யாடெஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அட்டர்னி ஜெனரலாக டிரம்ப் தெரிவு செய்திருக்கும் ஜெஃப் செஸ்ஷன்ஸ், இந்த வாரத்தில் முறையாக நாடாளுமன்றத்தால் உறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலமாக காலியாக இருக்கும் ஒரு நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பவரை அதிபர் இன்று மாலை அறிவிப்பார் என்று தெரிகிறது.

_93896195_gettyimages-633171432

Related posts: