படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் பலி!

Sunday, January 7th, 2018

சுமாத்ரா தீவின் முஷீ ஆற்றில் பயணிகள் படகொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து இடம்பெறும் போது படகில் 55 பேர் பயணித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் , உயிர் தப்பிய படகின் கேப்டன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தோனேசியாவில் கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற இரண்டாவது படகு விபத்து இதுவாகும்.கடந்த இரு தினங்குக்கு முன்னர் இடம்பெற்ற படகு விபத்தில் 9 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: