பங்களாதேஷில் தீ விபத்து – 56 பேர் பலி!
Thursday, February 21st, 2019
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா பகுதியில் ஒரு இரசாயன கிடங்காக பயன்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 56 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தினால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, குறுகிய வீதிகளில் இருந்து தப்பிக்க முடியாமல் போனதால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் தீ அணைப்புத் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதுடன், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தீ அணைப்பு படையின் தலைவர் அலி அகமது தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜப்பானில் அணுகுண்டு வீசிய செயல் மன்னிப்பு கேட்பதற்கும் கொடுப்பதற்கும் உரிய விடயமல்ல - ஒபாமா
நாடுகளிடையே சுவர்கள் வேண்டாம் - ஒபாமா!
இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசர தேவை எழுந்துள்ளது - ஜப்பான் அறிவிப்பு!
|
|
|


