நைஜீரிய இனக் கலவரத்தில் 86 பேர் பலி!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இனக் கலவரம் ஒன்றில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் நிலப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இதேபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்ட 19 பேர் விடுவிப்பு!
நினைவில்லமாகுகிறது ஜெயலலிதாவின் இல்லம் !
‘டோரியன்’ புயல் : கனடாவில் 5 லட்சம் பேர் பாதிப்பு!
|
|