நைஜரில் இருந்து தனது தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுகின்றது பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவிப்பு!
Monday, September 25th, 2023
ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நைஜரில் இருந்து தனது தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் பாஸூமை அகற்றி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய மக்ரோன், அடுத்த சில மணிநேரங்களில் தூதுவரும் பல இராஜதந்திரிகளும் பிரான்சுக்குத் திரும்புவார்கள் என அறிவித்திருந்தார்.
பிரெஞ்சு வீரர்கள் வசிக்கும் இராணுவ தளத்திற்கு வெளியேயும் தலைநகர் நியாமியிலும் கடந்த வாரங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல வாரங்களாக இராணுவத்தின் அழுத்தம் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் பிரான்ஸ் இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி, 20 பேர் காயம்
ஜப்பானிய பேரரசர் ஓய்வு பெறுகிறார்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன்!
|
|
|


