நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
Monday, August 14th, 2017
நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது
நோபாளத்தின் எட்டு மாவட்டங்களில் இந்த வெள்ளநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேபாளத்திற்கான சர்வதேச வானுர்தி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நேபாளத்தை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பிலிப்பைன்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 7 பேர் பலி
நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் - சீன வெளியுறவு...
|
|
|


