நெருக்கடியைப் போக்க பத்திரத் தாள்களை வெளியிடுகிறது ஜிம்பாப்வே!

பண நெருக்கடியைப் போக்கும் முயற்சியாக பத்திரத் தாள்களை (bond note) ஜிம்பாப்பே அரசாங்கம் வெளியிடவுள்ளது.
ஜிம்பாப்வேயின் தேசிய ரிசர்வ் வங்கியானது, ‘பத்திர தாள்கள்’ என்று ஜிம்பாப்வே வர்ணிக்கும் புதிய வடிவிலான பணத்தை அச்சடிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு இணையான மதிப்பை இந்த பத்திரங்கள் கொண்டிருக்கும். மேலும், ஆபிரிக்க ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து சுமார் 200 மில்லியன் டொலர் கடன் இந்த பத்திரங்களுக்கு ஆதரவளிக்கும்.
பத்திரத் தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள சில தினங்களுக்கு முன்பாகவே, அது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், சிலர் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
Related posts:
டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் தொடர்பில் மேலும் தகவல்
பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 14 வைத்தியர்கள் உயிரிழப்பு!
இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவசர நடவடிக்கை!
|
|