நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியது!

மேற்கு அவுஸ்திரேலியாவின் பர்த் நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹம்பலின் கடற்கரையில் கரையொதுங்கிய 150 திமிங்கிலங்களில் 140 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன.
உயிருடன் இருந்த 10 திமிங்கிலங்கள், கடலுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
டொல்பின் மீன் போன்ற வடிவமுடைய திமிங்கிலங்களே இவ்வாறு பாரியளவில் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இவ்வாறு நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியுள்ளமை அசாதாரணமான நிலை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
விசா மோசடி: 129 இந்திய மாணவர்கள் கைது!
முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்லத் தடை!
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146 பேர் காயம்!
|
|