நுழைவுச் சீட்டு முறைகேடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் விடுவிப்பு!

Monday, August 29th, 2016

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான நுழைவுச் சீட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஐரிஷ் தொழிலதிபர் ஒருவரை சிறையிலிருந்து பிரேசில் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

ரியோவில் உள்ள பாங்கு உயர்மட்ட பாதுகாப்பு சிறைச்சாலையில், டிஹெச்ஜி என்ற பிரிட்டிஷ் நாட்டு விருந்தோம்பல் நிறுவனத்தின் இயக்குநரான கெவின் மில்டன் மூன்று வாரம் சிறை வைக்கப்பட்டார்.

அயர்லாந்து ஒலிம்பிக் கவுன்சிலுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான நுழைவுச் சீட்டுகளை வைத்திருந்ததாக கெவின் மில்டன் கைது செய்யப்பட்டார். இதில் பல நுழைவுச் சீட்டுகள், ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழா தொடர்புடையதாகும். ஆனால், தாங்கள் எந்த தவுறும் செய்யவில்லை என டிஹெச்ஜி நிறுவனம் மறுத்துள்ளது.

Related posts: