நீதி துறையை பாதுகாக்க பிரித்தானியா தவறிவிட்டதாக குற்றச்சாட்டு!

Saturday, November 5th, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு, ஊடகங்களால் விமர்சனத்திற்கு உள்ளானதை தொடர்ந்து, நீதித் துறையை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர்களோடு சேர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகின்ற வழிமுறை தொடங்கப்படுவதை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளும் மக்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்தி ஒரு செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.

இந்த தீர்ப்பு ஏற்றுகொள்ள முடியாதது என்று பிரிட்டன் சமூகங்களின் அமைச்சர் சாஜித் ஜாவித் கூறியிருக்கிறார்.

இந்த விடயத்தில் தலையிட அரசு தயங்குவது கவலை அளிக்கிறது என்று தொழிற் கட்சி கூறியிருக்கும் நிலையில், ஊடகங்கள் வெறுப்புணர்வை தூண்டி வருவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

_92287681_84757570-19a6-4605-a6e6-05308739d4cd

Related posts: