நிலைத்திருக்க விரும்பினால் அதற்கான வாசல் திறந்தே உள்ளது!
Saturday, June 24th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் நிலைத்திருக்க விரும்பும் பட்சத்தில் அதற்கான வாசல் திறந்தே உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு முன்னதாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளை மதிக்கும் வகையில்இ ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ள நிலையிலேயே குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா முழுமையாக விலகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலகில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாக்க பொலிஸ்!
பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா - இதுவரை 41 ஆயிரம் பேர் பலி!
இஸ்ரேல் – காஸா மோதல் உக்ரைன் போரை திசைதிருப்பிவிட்டது - உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி வேதனை...
|
|
|


