உலகில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாக்க பொலிஸ்!

Tuesday, April 3rd, 2018

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாப்பதற்காக பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாத காரணத்தினால், அங்கு ஆறுகள், ஏரிகள் போன்றவை வறண்டு போயுள்ளன.

தொடர்ந்து நிலவும் வறட்சி காரணமாக கேப்டவுனை தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்தது.

அடுத்த மாதம் ஏப்ரல் 16-ஆம் திகதி தண்ணீர் முழுவதும் தீர்ந்து போய்விடும் என்பதால், டே ஜீரோ எனப்படும் பூஜ்ஜிய நாளை கேப்டவுன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பின் அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு உதவியதால் டே ஜீரோ’ நாள் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கேப்டவுன் நகரில் இருக்கும் மக்கள் தினமும் 50 லிட்டர் தண்ணீர்ருடன் தங்கள் நாளை கழிக்க பழக்கப்பட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் தண்ணீரை எப்படி எல்லாம் சிக்கனப்படுத்தி பயன்படுத்தலாம் என்ற தகவலும் கேப்டவுன் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தண்ணீரைப் பாதுகாக்க கேப்டவுனில் பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகில் முதல் முறையாக தண்ணீரை பாதுகாக்க பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கேப்டவுனில் காரைத் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வது, நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் நிரப்புவதும் விரோதாமாகும் என்பது குறிப்பித்தக்கது.

Related posts: