நிலவில் இறுதியாக கால் பதித்தவர் இயற்கை எய்தினார்!

நிலவில் கால் பதித்த கடைசி நபரான யூஜின் செர்னன் உடல்நலக் குறைவு காரணமாக தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டு Apollo 17 விண்கலத்தின் தலைமைப் பொறுப்பில் யூஜின் செர்னன் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
இது யூஜின் செர்னனின், மூன்றாவது விண்வெளிப் பயணமாகும். அத்துடன், அமெரிக்கா இறுதியாக நிலவுக்கு மனிதர்களை விண்வெளிப் பயணமும் இதுவேயாகும். இதேவேளை, நிலவில் கால் பதிக்கும் இறுதி மனிதனாக தாம் இருக்க கூடாது எனவும், நிலவில் தொடர்ந்தும் மனிதர்கள் கால் பதிக்க வேண்டும் எனவும் யூஜின் செர்னன் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாகிஸ்தானின் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் சாவு
தத்ரூபமாக வரையப்பட்ட தாய்லாந்து குகை மீட்புப் பணி!
மொஸ்கோவின் புறநகர் பகுதி அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு - 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...
|
|