நிலநடுக்கத்தின் விளைவால் எவரெஸ்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் ஓட்டைகளும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர். இதனால் இமயமலையின் உயரம் 60 செ.மீ வரை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆய்வாளர் ஜான் இலியட் தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது எவரெஸ்டில் பனி மலை ஏறும் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அவர்கள் குறித்த மலையில் பிளவுகளும், ஓட்டைகளும் இருப்பதை போட்டிக்காகஆராய்ச்சியில் ஈடுபட்ட குழுவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
Related posts:
|
|