நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, February 22nd, 2018

பசுபிக் வலையத்தில் ஏற்பட்டுள்ள கிட்டா புயல் காரணமாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தென் தீவுக்கு புயல் அண்மித்ததை அடுத்து அங்கு பாடசாலைகள் மற்றும் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு நியூசிலாந்தின் வெலின்டன்தலைநகரில் இருந்து வெளியேறும் சகல விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் எதுவித தகவலும் கூறமுடியாதுள்ளதென கிறிஸ்ட்சர்ச் மேயர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: