புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள அவுஸ்திரேலியா!

Thursday, September 15th, 2016

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

குறித்த ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்தவித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் (Peter Dutton) பாராளுமன்றத்தில் கருத்து வெயியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார். படகு வழியாக தமது நாட்டுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 2013ம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 9.6 பில்லியன் டொலர்கள் வரை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு இதற்காக அவுஸ்திரேலியா 5.7 பில்லியன் டொலரை செலவிடவுள்ளதாகவும் யுனிசெப் மற்றும் சேவ் த சில்ரன் ஆகிய சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

1201852232Untitled-1

Related posts: