நான் திருடனல்ல – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ்ஷெரிப்!

10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விரைவில் நாடு திரும்புவேன். சிறையிலிருந்து போராட்டத்தை தொடர்வேன் எனக்கூறியுள்ளார்.
‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் தொடர்பான வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 68 கோடி ரூபாய் அபராதமும் விதித்து அந்த நாட்டு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. மகள் மரியமுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 18 கோடி ரூபாய் அபராதமும் நவாஸ் ஷெரீப்பின் மருமகனும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான சப்தாருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப் கூறியதாவது: நான் ஒன்றும் திருடன் அல்ல. விரைவில் பாகிஸ்தான் திரும்புவேன். சிறையிலிருந்தவாறே எனது போராட்டத்தை தொடர்வேன். மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கூறியுள்ளார்
Related posts:
உலகை காப்பாற்றிய நபர் உயிரிழந்தார்!
செல்பி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள் - இந்தோனேசியா ஜாவா தீவில் சம்பவம்!
ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து - மதுரை ரயில் நிலையத்தில் 10 பேர் பலி!
|
|