நடுவானில் தொடர்பை இழந்த இலண்டன் விமானம்!

Monday, February 20th, 2017

மும்பையில் இருந்து இலண்டன் நோக்குப் பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை மும்பையில் இருந்து இலண்டன் நோக்குப் பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றே இவ்வாறு தகவலை இழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இது குறித்து தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை மும்பையில் இருந்து இலண்டன் நோக்குப் பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது.

விமான போக்குவரத்து நடைமுறையின்படி, ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.

ஆனால், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்திருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து சந்தேகமடைந்த ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றிருந்ததாகவும், சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் செய்தி தொடர்பாளர்,

”முன்னெச்சரிக்கையாக ஜெர்மனி விமானப்படை விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பாதுகாப்பையும், அதில் உள்ள பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சில நிமிடங்களில் தகவல் தொடர்பு சரிசெய்யப்பட்டது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பினருக்கு தகவல் வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், பயணிகளுக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி அவர்கள் லண்டன் சென்றனர் என்றும். அவர்களின் பாதுகாப்பை தாம் உறுதி செய்ததாகவும் குறிப்பிட்ட அவர்,

சம்பந்தப்பட்ட விமானிகள் குழு, வழக்கமான நடைமுறைகளின்படி, பணியிலிருந்து இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர் என்றும், விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

_94731859_gettyimages-151948322

Related posts: