தோழியின் தலையீடு : தென் கொரிய அதிபரை விசாரிக்க விரும்பும் அரசு வழக்கறிஞர்கள்!
Monday, November 14th, 2016
தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்பட தன்னுடைய தோழியை மறைமுகமாக அனுமதித்தார் என்ற சந்தேகத்தின்பேரில், தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹேவை விசாரிக்க விரும்புவதாக அரசு தரப்புவழக்கறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.
தென் கொரிய அதிபர் பதவி விலக வேண்டும் என்று சுமார் ஒரு லட்சம் பேர் சோல் தெருக்களில் குவிந்த அடுத்த நாள் இந்த திடீர் திருப்பம் வந்துள்ளது.
தென் கொரிய அதிபர், தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அவருடைய நீண்ட கால தோழியான சோய் சூன் சில்-என்வரால் செல்வாக்கு செலுத்தப்பட்டு ஆட்சிபுரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அதிபரின் நட்புறவை சோய் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்கு பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

Related posts:
ஐ.நா தீர்மானத்தின் மீது பாய்ந்தது சீனா மற்றும் ரஷ்யாவின் ‘வீட்டோ’!
அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு!
சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம் - பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவி...
|
|
|


