தோல்வியை ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்படுவார்: ஜோ பைடன் தரப்பு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றப்படுவார் என ஜோ பைடன் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றிருப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டுவதால் தோல்வி நேரிட்டால் அதை ஏற்றுக் கொள்வாரா என தெரியவில்லை.
இந்நிலையில் ஜோ பைடன் செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரு பேட்ஸ், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற்றபடுவார் எனவும், வெள்ளை மாளிகையில் அத்துமீறி தங்கியிருப்போரை வெளியேற்றும் திறன் அமெரிக்க அரசுக்கு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் முன்னிலை வகித்துவரும் சில மாகாணங்களில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட ட்ரம்பின் குடியரசு கட்சி முயற்சிசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: