தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி தெரிவித்தார் – பாக்கிஸ்தான் அதிகாரிகள் தகவல்!
Saturday, May 23rd, 2020
பாக்கிஸ்தானில் 107 பயணிகளுடன் விழுந்து நொருங்கிய விமானத்தின் விமானவோட்டி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என பிஐஏ விமானசேவையின் தலைவர் அர்சாட் மலிக் தெரிவித்துள்ளார்.
இது துயரமான சம்பவம் நான் கராச்சிக்கு செல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். கப்டனிடமிருந்து இறுதியாக நாங்கள் கேட்டது விமானத்தில் தொழில்நுட்ப கோhளறு ஏற்பட்டுள்ளது என்பதையே என அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்க தயாரானவேளை அவர் இதனை தெரிவித்தார்,நாங்கள் விமானம் தரையிறங்குவதற்காக தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்தோம்,விமான ஒடுபாதையில் வேறு விமானங்கள் இல்லை நீங்கள் தரையிறங்கலாம் என தெரிவித்தோம் அவர் விமானத்தை வேறுபக்கத்தில் இறக்க முயன்றார் என அர்சாட் மலிக் தெரிவித்துள்ளார்.
இதற்கு என்ன காரணம் தொழில்நுட்ப கோளாறு என்னவென்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமானவிபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து 11 உடல்களை ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|
|


