தொடர் அணு ஆயுத சோதனையால் ஆபத்து!

Friday, September 8th, 2017

வடகொரியா அண்மையில் மேற்கொண்ட அணு ஆயுத சோதனையை தொடர்ந்து அங்கு பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியா Punggye-ri என்ற மலைப்பகுதியில் நிலத்திற்கு அடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அணு ஆயுத சோதனையை நடத்தியிருந்தது.

மலைப்பகுதியானது சீனா, வடகொரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடமாகும்.இந்நிலையில், குறித்த பகுதியில் மேற்கொண்ட அணு ஆயுத சோதனையால் அந்த பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்த புகைப்படங்களை செய்மதி வெளியிட்டுள்ள நிலையில், அணு ஆயுத சோதனையால் நில அதிர்வானது ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.இந்நிலையில், வடகொரியா இது போன்ற அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்தும் மேற்கொண்டால் சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் மற்றும் மண் சரிவு அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: