தேவாலய தாக்குதல் முயற்சி: கைது செய்யப்பட்ட பெண்கள் மீது குற்றச்சாட்டு பதிவு!
Tuesday, September 13th, 2016
கடந்த வாரத்தில், பாரிஸ் நகரில் உள்ள நாத்ர டாம் தேவாலயத்திற்கு அருகே எரிவாயு கலன்கள் நிறைந்த கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் மீதும் பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு நீதிபதிகள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட மூவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தங்களைக் காவலில் வைத்த போலீஸ் அதிகாரிகளைக் கொல்ல முயற்சி செய்ததாக, இப்பெண்களில் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போலீஸார் தங்களை கைது செய்த போது, இவ்விரு பெண்களும் தங்களிடம் இருந்த கத்திகளை உருவி, ஒரு போலீஸ் அதிகாரியின் தோள்பட்டையில் காயம் ஏற்படுத்தியாக கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகளுக்கு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்படுகிறது என்று எச்சரிக்கை அளிக்க தவறியதால், சந்தேகத்தின் பேரில் மேற்கூறிய பெண்களில் ஒருவரின் ஆண் நண்பரொருவர் மீது முறையான விசாரணை நடந்து வருகிறது.

Related posts:
|
|
|


