தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி – டெட் குரூஸ் வெற்றி!
Tuesday, April 19th, 2016
அமெரிக்காவில் நவம்பர் 8-ந் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் வயோமிங் மாகாணத்தில் நடந்த குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டெட் குரூஸ் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 14 பிரதிநிதிகள் வாக்குகளையும் அவர் கைப்பற்றினார். 1இ237 பிரதிநிதிகள் வாக்குகளை கைப்பற்றினால்தான் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட முடியும் என்ற நிலையில் டிரம்பை வீழ்த்துவதில் டெட் குரூஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
டிரம்ப் 21 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்இ டெட் குரூஸ் 10 மாகாணங்களில் அவரை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


