தேசத் துரோக குற்றச்சாட்டில் பர்வேஷ் முஷரப்!

Saturday, June 2nd, 2018

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷரப் தற்போது தேச துரோக குற்றச்சாட்டை எதிர்நோக்கி வருகிறார்.இவர் நீதிமன்ற அழைப்பாணைகளை உதாசீனம் செய்த நிலையில் தற்போது டுபாயில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இவரது கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பனவற்றை பாகிஸ்தானிய நீதிமன்றம் முடக்கியுள்ளது.

இவர் பதவியில் இருந்த காலப்பகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தன்னிச்சையாக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாகிஸ்தானிய உயர் நீதிமன்ற நீதியரசர்களை வீட்டு காவலில் வைத்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்திருந்தார்.

இவரது கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லவோ அல்லது, வங்கிகளின் ஊடாக நிதி பரிமாற்றலை மேற்கொள்ளவோ முடியாது எனவும்  வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது எனவும்  பாகிஸ்தானிய உட்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பர்வேஷ் முஷரபிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் பட்சத்தில் அவருக்கு தூக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டமையோ வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: