தென் கொரிய அதிபரது தோழி தடுத்து வைப்பு?

தென் கொரிய அதிபரின் மீது செல்வாக்கு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்மணி, வெளிநாட்டிற்கு தப்பிவிட முயற்சிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவை ஆட்டிப்படைக்கும் அரசியல் மோசடியில், அதிபர் பார்க் குன் ஹை-யுடன் தொடர்புடைய சான்றுகளை அழித்துவிடவும் சோய் சூன் சில் முயற்சிக்கலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.
சோய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, கைது செய்யப்பட்டவர் தொடர்பான ஆவணங்களைத் தேடி சோலிலுள்ள எட்டு வங்கிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருக்கின்றனர்.
அதிபரோடு கொண்டிருந்த செல்வாக்கை பயன்படுத்தி சோய், நிதி ஆதாயங்களை தேடி கொண்டாரா என்று காவல்துறையினர் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மியான்மரில் மசூதி தீ வைத்து அழிப்பு!
மின்னல் தாக்குதலில் சிக்கி 16 பேர் பலி - ருவாண்டாவில் பரிதாபம்!
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்!
|
|