தென் கொரியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா – கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் பாதிப்பு!

தென் கொரியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 79 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு பின் ஒரேநாளில் பதிவான அதிக அளவிலான எண்ணிக்கை இதுவாகும். இதற்கமைய தென்கொரியாவில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளதுடன் 269 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தென் கொரிய அரசு எடுத்த பல துரித நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு நீண்ட காலமாக அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பசுபிக் தீவில் இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி !
முஸ்லிம் தடை குறித்த வாசகங்கள்: டிரம்ப் வலைத்தளத்திலிருந்து தற்காலிக நீக்கம்!
பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!
|
|