தென் ஆபிரிக்காவில் துப்பாக்கிசூடு – எட்டு பேர் பலி – நான்கு பேர் காயம்!
 Tuesday, January 31st, 2023
        
                    Tuesday, January 31st, 2023
            
தென் ஆபிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கிகெபெர்ஹா நகரில் பிறந்தநாள் விழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
என்றாலும் வீட்டின் உரிமையாளரும் கொல்லப்பட்டவர்களில் அடங்கியுள்ளதாக காவல்துறையினர்; தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்கா உலகின் மிகவும் அதிகமான துப்பாக்கி குற்றங்கள் இடம்பெறுகின்றன. எனினும் பொதுமக்கள் மீதான துப்பாக்கி பிரயோகங்கள் அரிதாகவே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கார் மீது வாகனம் மோதியதில்  தகராறு:  அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை !
உலகளாவில் 65 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது ஸ்பெயின் - மிகப் பெரிய அழுத்தத்தில் இஸ்ரேல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        