தென்கெரியாவில் விமானம் விபத்து!
Saturday, April 7th, 2018
தென்கொரியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதால் 2 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்கெரியாவின் சியோல் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட இராணுவ விமானம் ஒன்று பணி முடிந்து, தளத்திற்கு திரும்பும் வேளையில் விமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விமானத்தை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் இராணுவ அதிகாரி ஒருவர் விமானம் மலையுடன் மோதி வெடித்து சிதறியுள்ளதாகவும், அதில் இருந்த 2 இராணுவ வீரர்களும்பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசர சட்டத்திருத்தம் பிறப்பிக்கப் பட்டாலும் பீட்டாவைத் தடை செய்தே ஆக வேண்டும்- எங்கள் உரிமைகளில் தலை...
சர்வதேச ஆயுத விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது!
ஜேர்மன் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|
|


