துருக்கி தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 12 பேர் பலி!

துருக்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியின் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவிகள்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து அதனா பகுதி கவர்னர் மஹ்மத் டெமிர்டஸ் கூறுகையில், “நம்முடைய குடிமக்கள் 12 பேரை தீ விபத்தில் இழந்துள்ளோம். அதில் 11 பேர் பள்ளி மாணவிகள். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த மாணவிகளுக்கு 11-14 வயது வரை இருக்கும். முதல் கட்ட தகவலின் படி மின்சார கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கும் என்று தெரிகிறது. நாளை முதல் விபத்து குறித்து விசாரணை நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
Related posts:
|
|