துபாய் விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானி தான் காரணமா?

Tuesday, March 22nd, 2016

ரஷ்ய நாட்டில் துபாய் விமானம் வெடித்து சிதறி விமான குழுவினர் உள்பட 62 பயணிகள் பலியான சம்பவத்திற்கு அந்த விமானத்தை இயக்கிய விமானி தான் காரணம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய் நாட்டிற்கு சொந்தமான குடலனரடியi குணு981 என்ற பயணிகள் விமானம் கடந்த 19ம் திகதி ரஷ்யா நாட்டில் தரையிறங்கவதற்குசில வினாடிகள் முன்னதாக தரையில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விமான குழுவினர் 6 பேர் உள்பட 62 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக பலக்கட்ட விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்இ இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக விமானியின் உடல்நிலை தான் காரணமாக இருக்க முடியும் என தற்போது புதிய தகவலகள் வெளியாகியுள்ளன.
கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரை சேர்ந்த முன்னாள் விமானி ஒருவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் ரஷ்ய நாட்டு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில்இ ‘விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தில் தான் நான் முன்னதாக பணிபுரிந்து வந்தேன்.இந்த நிறுவனம் விமானிகளுக்கு குறிப்பாக இளம் வயதுள்ள விமானிகளுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பணியில் ஈடுப்படுத்தி வந்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக இளம் வயது விமானிகள் பகல் நேரத்தில் விமானங்களை இயக்கி விட்டு சிறிது கூட ஓய்வின்றி இரவு நேரத்திலும் பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது.
இவ்வாறு இரவு பகல் என தொடர்ச்சியாக விமானிகள் பணிபுரிந்து வந்ததால் அவர்களுக்கு சோர்வும் விரக்தியும் ஏற்பட்டதை நானே நேரடியாக பார்த்துள்ளேன்.
மேலும் அந்த நிறுவனத்தை விட்டு இறுதியாக வெளியேறியபோது ‘இதுபோல் விமானிகளுக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தி வந்தால் நிச்சயமாக விபத்து தான் ஏற்படும்’ என தைரியமாக கூறிவிட்டு வெளியேறிவிட்டேன்’ என அந்த முன்னாள் விமானி கூறியுள்ளார்.
முன்னாள் விமானி கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய செய்தி நிறுவனமும் ஏற்கனவே சில தகவல்களை சேகரித்துள்ளது.
அதில் ‘விபத்துக்குள்ளான துபாய் விமானத்தின் துணை விமானியான Alejandro Cruz Alava என்பவரின் தகவல்களும் இருந்துள்ளன.
அதாவது விபத்து நிகழ்வதற்கு முன்னதாக அவர் தொடர்ச்சியாக 11 நாட்கள் வேலையில் இருந்து வந்துள்ளார். இடையில் ஒரு நாள் மட்டுமே அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அந்த துணை விமானியை பகல் நேரப் பணியிலிருந்து இரவு நேரப் பணிக்கு மாற்றும்போதும்  கூட அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை.
இதுமட்டுமில்லாமல் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் முதன்மை விமானியாக பணியாற்றிய Aristos Socratous என்பவர் ‘நிறுவனத்தில் அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதால் அவரது பணியை ராஜினாமா செய்வதாக முறையிட்டு அதற்கான ஆவணங்களையும் நிறுவனத்தில் வழங்கியிருந்ததாக அவருடன் பணிபுரிந்த பெயர் வெளியிடாத விமானி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அதிகமான வேலைப்பளு காரணமாக இதே துபாய் விமானத்தை இயக்கியவாறு விமானிகள் தூங்கிய சம்பவங்களும் நடந்துள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
எனவே துபாய் விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் உடல்நலன் முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என விசாரணை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் தொடர்பாக துபாய் விமான நிறுவனம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: