துபாயில் விமானம் விழுந்து விபத்து – 04 பேர் உயிரிழப்பு!
Friday, May 17th, 2019
துபாய் விமான நிலையத்தின் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.
விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில வினாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
உடனே மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கியது.
விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஈராக்கில் அமெரிக்க படை மீது வீசப்பட்ட எறிகணையில் இரசாயன பொருளா?
ப்ரெக்ஸிட் விவகாரம்: பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது!
ஜி 7 உச்சிமாநாடு ஆரம்பமானது!
|
|
|


