தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பலி!

உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் படி ஆப்கானிஸ்தானிலேயே அதிகளவிலான சிறார்கள் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கமைய அங்கு 3 ஆயிரத்து 512 சிறார்கள் பலியானதுடன், அது மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதேவேளை, சிறார்களை ஆயுதம் ஏந்தச் செய்து யுத்தங்களை மேற்கொள்வது வேதனைக்குரியது எனவும் அன்டோனியோ குட்ரஸ் கவலை வெளியிட்டுள்ளார்
சோமாலியா மற்றும் சிரியாவில் சிறார்களை ஆயுதமேந்தச் செய்யும் நடவடிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|