தீவிரவாதத்துக்கு நிதியளிப்பதை கட்டார் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப்!
Sunday, June 11th, 2017
தீவிரவாதத்துக்கு நிதியளிப்பதை கட்டார் நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். தீவிரவாத இயக்கங்களுக்கு கட்டார் மறைமுகமாக உதவுவதாக குறிப்பிட்டு, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை வளைகுடா நாடுகள் துண்டித்துள்ளன.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்டார் தவறுதலாக மிக அதிகளவிலான நிதியை தீவிரவாதத்திற்கு அளிக்கிறது. இதனை கட்டார் நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன், தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
Related posts:
கேமரூன் நாட்டில் மனிதவெடிகுண்டு தாக்குதல்: மாணவி சிக்கினார்!
பிரதமர் பதவிக்கு ஷின்ஸோ மீண்டும் போட்டி!
ஷன்ஷான் புயல் - எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஜப்பானுக்கு!
|
|
|


