திருப்பூரில் கைதுசெய்யப்பட்டவருடன் இலங்கையர்களுடன் தொடர்பு!
Monday, August 1st, 2016
தமிழகம், திருப்பூரில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் அனுதாபி இலங்கையில் உள்ள சிலருடன்தொடர்புகளை கொண்டிருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தமிழகபொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொரிசுதீன் என்ற இவர் மேற்கு வங்காளத்தில் இருந்து தமது குடும்பத்துடன் வந்து திருப்பூரில் தங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இவர், ஜூலை மாதம் முதல் வாரத்தில் திருப்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர், ஏற்கனவே தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளாக கருதப்படும் மூன்று பேருடன் தொடர்புகளை கொண்டிருந்த சந்தேகத்தை இந்திய காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். எனினும் மொரிசுதீன், இலங்கையர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற விடயம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொரிசுதீன் அல்லது மோஸி அல்லது மஞ்சு என்ற அழைக்கப்பட்ட இவர், மேற்கு வங்காளம், பிர்பாம் மாவட்டத்தில் இருந்து திருப்பூரில் மனைவி மக்களுடன் குடியேறி அங்கே மளிகைக்கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இவர் இலங்கையில் உள்ள ஹூலா பாய் என்பவருடன் தொடர்பை பேணி வந்ததாக விசாரணைகளில்இருந்து தெரியவந்துள்ளது.
இவர், தமிழகத்தில் செயற்பட்டு பாகிஸ்தானிய உளவாளிகளாக செயற்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே 2012ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தமாம் அன்சாரி, அருண் செல்வராஜன், மற்றும்ஷாகிர் ஹூசைன் ஆகியோருடன் தொடர்புகளை பேணிவந்தரா? என்பது தொடர்பிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன.
Related posts:
|
|
|


