திபெத் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்!
Thursday, March 31st, 2016நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அது ரிக்டர் அலகில் 4.7 ஆக இது பதிவாகி உள்ளதாகவும் தெரியவருகின்றது..
தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் மாலை 6 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஓக்கல்துங்கா மாவட்டத்தில் மையமாக கொண்டு 4.1 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுத்தை அடுத்து, இதுவரை சுமார் 442 முறை ரிக்டர் அலகில் 4-க்கும் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
Related posts:
செவ்வாய்யில் வேலைவாய்ப்பு - நாசா வெளியிட்ட பரபரப்பு போஸ்டர்!
ஐ.நா. அமைதிகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு!
ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் - ரஷ்யா அழைப்பு!
|
|