தாய்லாந்தில் கோர விபத்து: 25 பேர் பலி!

தாய்லாந்தின் கிழக்கு மாகாணத்தின் சோன்புரியில் மினி வான் ஒன்றும் பிக் அப் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களிலும் ஆட்கள் நிறைந்திருந்ததாகவும், வளைவு ஒன்றில் திரும்பிய மினி வான் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, எதிரே வந்த பிக் அப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
வாகனங்கள் மோதிய அதிர்ச்சியில் சிலரும், விபத்தினால் ஏற்பட்ட தீயில் கருகி மற்றவர்களுமாக 25 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களுள் இரண்டு கைக்குழந்தைகளும் அடக்கம்.
Related posts:
இனி போர் நடக்காது - உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வடகொரிய அதிபர்!
கொரோனா சிகிச்சை நிலையத்தில் பற்றிய தீ –7 நோயாளிகள் பலி!
சர்வதேச நாணயமாக உருவெடுத்தது இந்திய ரூபாய் - ரஷ்யா, பிரித்தானியா உட்பட பல நாடுகளுக்கு அனுமதி!
|
|