தாய்க் குண்டை பயன்படுத்தியது அமெரிக்கா!
Saturday, April 15th, 2017
ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – நன்கஹர் மாகாணத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது அணுவற்ற குண்டொன்றை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பென்டகன் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, அனைத்து குண்டுகளுக்கும் தாய் குண்டாக (the mother of all bombs) இந்தக் குண்டு விளங்குகிறது என்றும், இதனை கடந்த 2003ஆம் ஆண்டு இந்த குண்டு சோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அமெரிக்கப்படைகள் இந்தக் குண்டு எந்தப் போரின் போதும் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் – நன்கஹர் மாகாணத்திலுள்ள ஐஎஸ் அமைப்பின் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்திருக்கிறது. இந்தக் குண்டுத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
|
|
|


