தாக்குதலுக்கு திட்டமிட்ட இருவர் கைது!
Saturday, July 30th, 2016
பெல்ஜியம் நாட்டில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்படவேண்டுமா என்று தீர்மானிக்க இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் மோண்ஸ் பகுதியில் உள்ள ஏழு வீடுகள் மற்றும் லீஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
கைது செய்யப்பட்டவர்கள், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட, மார்ச் மாதம் ப்ரஸல்ஸில் நடந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களாக இருப்பதாக தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது.
Related posts:
சீனாவை நிடா சூறாவளி நாளை தாக்க கூடும்: தேசிய வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை!
வட கொரிய ஜனாதிபதியை கொல்ல திட்டம்!
மர்மமான மலேசிய விமான தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!
|
|
|


