தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளது – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும், மூன்றாம் உலகப்போர் உருவாகும் எனவும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகம் மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உள்ளது. ஆனால் மூன்றாம் உலகப்போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும். அந்த போர் சாதாரண போர்களைப் போலிருக்காது. நவயுக ஆயுதங்கள் காரணமாக மூன்றாம் உலகப்போரால் முழுமையாக அழிவு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் நெருங்குகின்றது. தற்கால ஆயுதங்கள் காரணமாக உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் உள்ளது.
மூன்றாம் உலகப்போரைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும். அத்துடன், தான் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன், ரஷ்யப் போர் உட்பட பல முரண்பாடுகளைத் தன்னால் தவிர்த்திர்க்க முடியும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|