தரையில் மோதி விமானம் விபத்து -16 பேர் ஸ்தலத்தில் பலி!
Monday, October 11th, 2021
ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது.
குறித்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் இராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது
Related posts:
மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராக உள்ளது - தென்கொரியா!
24 இலட்சம் சிரியார்களுக்கு சவுதி அரேபியா அடைக்கலம்!
கடும் புயல்: 50 இலட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு!
|
|
|


