“தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” – பத்திரிகையாளர் வேண்டுகோள்!
Tuesday, May 31st, 2016
ஓராண்டுகாலமாக சிரியாவில் பணயக் கைதியாக உள்ள ஜப்பானிய பத்திரிகையாளர் என கருதப்படும் ஒருவரின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தேதி குறிப்பிடாத அந்த புகைப்படத்தில் காணப்படும் நீண்ட தாடி வைத்துள்ள ஒருவர் “தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இது எனக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு” என்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட அட்டையை வைத்துள்ளார்.
ஜூம்பெய் யாசுடா என்ற இவர் அல்-கைய்தாவோடு தொடர்புடைய ஒரு குழுவால் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. யாசுடாவுக்கு உதவுவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
சிரியாவிலுள்ள இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பு கடந்த ஆண்டு இரண்டு ஜப்பானிய பணயக் கைதிகளை கொன்றது குறிப்பிடதக்கது.
Related posts:
போர்த்துகலில் காட்டுத்தீ!
அலெப்போ மக்களின் நிலை குறித்து விவாதிக்க அவசர கூட்டம்!
கத்திக் குத்து தாக்குதல் – இலங்டனில் இலங்கை இளைஞன் கொலை!
|
|
|


