தமிழகத்தின் 20 ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்!

Saturday, October 7th, 2017

தமிழகத்தின் 20 ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன், அரசியலைப்பு சட்டத்திற்கிணங்க அரசியல் சார்பின்றி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவி ஏற்பு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

.

Related posts: