தன்சானியாவில் சீரற்ற காலநிலை – வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழப்பு!
 Friday, April 26th, 2024
        
                    Friday, April 26th, 2024
            
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் அங்கு பெய்து வரும் மழை காரணமாக 51 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு தன்சானிய பிரதமர், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியது பிரித்தானியா : கனடாவின் அதிரடி முடிவு!
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு!
ஜனாதிபதித் தேர்தல்: 78,403 வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிரகாரிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        