டொனால்ட் ட்ரம்ப்பின் பயணத்தடை சட்டத்திற்கு அனுமதி!
Tuesday, June 27th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முஸ்லிம் தேசங்களின் பிரஜைகளுக்கான பயணத்தடை சட்ட மூலம் பகுதி அளவில் மீள அமுலாக்கப்படுவதற்கு அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது
ஆறு முஸ்லிம் நாடுகளின் பிரஜைகளுக்கு 90 நாட்களுக்கும், அகதிகளுக்கு 120 நாட்களுக்கும் தடைவிதிக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்பினால் இரண்டு தடவைகள் முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களுக்கும் நீதிமன்றங்களின் ஊடாக இடைக்காலத் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது
இந்த சட்ட மூலத்தை பகுதி அளவில் நடைமுறைப்படுத்த அனுமதித்துள்ள உச்ச நீதிமன்றம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இது குறித்த இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது இது தமக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றி என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Related posts:
ரஷ்யாவின் வான் படை தாக்குதலில் 66 பேர் உயிரிழப்பு!
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன -துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்...
ரைசியின் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கின்றது – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!
|
|
|


