டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த புடின்!

ரஷ்ய மண்ணில் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க உளவுத்துறை உதவியமைக்காக ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று முக்கியத்துவமிக்க தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த விடயத்தை விளாடிமிர் புடின் கூறியதாக கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
உளவுத்துறை மூலமாக குறித்த தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்துள்ள கிரெம்ளின் மாளிகை, அது தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் செய்ன்ட் பீட்டர்ஸ்பெர்க்கைத் Saint Petersbrg தாக்கும் சதித்திட்டத்தை கண்டுபிடித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய புலனாய்வு அமைப்பான எஃப்.எஸ்.பியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இரண்டு ரஷ்ய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொதுக் கூட்டம் ஒன்றைத் தாக்கும் திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|