டெல்லியில் நில அதிர்வு!
Thursday, November 17th, 2016
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தின் ரிவாரி மாவட்டத்தின் பாவால் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.
நில அதிர்வை உணர்ந்த உடன் நிறைய பேர் டுவிட்டர் வலைதளத்தில் இதனை பதிவு செய்தனர்.10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரான்ஸ் ஜனாதிபதி!
மீண்டும் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்..?
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
|
|
|


