டீசல் வாகனங்களை செலுத்தத் தடை- வருகிறது புதிய சட்டம்!

புகையால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிக்க ஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக அறிவித்துள்ளது.
துறைமுக நகரமான ஹம்பேர்க்கில் அதிகளவான டீசல் வாகனங்கள் வந்து செல்வதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், எதிர்வரும் 31 ஆம் திகதிக்குபின் யூரோ 6 புகைத் தரச் சான்று இல்லாத டீசல் வாகனம் எதனையும் இயக்கக் கூடாது என ஜேர்மன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜேர்மனில் டீசல் வாகனங்கள் செலுத்துவற்கு தடை விதிக்கப்பட்ட முதலவாது நகரம் இதுவேயாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலி தாக்குதலில் 3 படையினர் பலி!
ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டுக்கு பதிலாக கட்டுபடியாகக்கூடிய மருத்துவ காப்பீடு - டிரம்ப்!
சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் - சீன வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
|
|