டிரம்ப் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது – ஜப்பான் பிரதமர்!

Friday, November 18th, 2016

 

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு சந்தித்துள்ள முதல் வெளிநாட்டு தலைவரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனக்கு டிரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் தன்னால் டிரம்புடன் நம்பிக்கை தரும் உறவினை நிறுவ இயலும் என்று தெரிவித்துள்ளார்.

நியூ யார்க்கில் உள்ள டிரம்ப் டவர் கட்டடத்தில் அவசரமாய் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்ததாக, டிரம்புடனான சந்திப்பு குறித்து அபே விவரித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. வழக்கமான நடைமுறையை உடைக்கும் விதமாக, டிரம்ப் மற்றும் அபே இடையே நடந்த சந்திப்பை திட்டமிடும் பணியில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் பங்கில்லை.

அமெரிக்கா வழங்கும் ராணுவ ஆதரவுக்காக அமெரிக்காவின் ஆசிய கூட்டாளி நாடுகள் கூடுதலாக நிதி அளிக்க வேண்டும் என்று தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டதன் மூலம், அமெரிக்காவின் ஆசிய கூட்டாளிகள் மத்தியில் டிரம்ப் அச்சத்தை ஏற்படுத்தினார்.

_92494816_abe

Related posts: