டினாவுவான் நகர மேயர் சுட்டுக்கொலை –  பிலிப்பைன்சில் சம்பவம்!

Tuesday, July 3rd, 2018

பிலிப்பைன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேயரை மர்ம நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது.

பிலிப்பைன்சின் தெற்கு மணிலாவின் டினாவுவான் நகர மேயர் ஆன்டினோ ஹாலாலி, இவர் போதை மருந்து கடத்தல் கும்பலை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தீவிரம் காட்டிவந்தார். கடந்த சில நாட்களுக்கு இவரது உத்தரவின் பேரில் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இவரது சொந்த கிராமத்தில் குற்றவாளிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. தேசிய கொடியை ஏற்றி வைத்த மேயர் அதற்கு மரியாதை செலுத்திக்கொண்டிருந்த நேரத்தில் எதிரே பார்வையாளர்கள் வரிசையில் நின்றிருந்த மர்ம மனிதன் திடீரென மேயரை நோக்கி சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதன் மொபைல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

முன்னதாக மேயர் ஆன்டினோ ஹாலாலிக்கு போதை மருந்து கடத்தல் கும்பலுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. தொழிற்போட்டி, முன்விரோதம் காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related posts: